Breaking
Sun. Dec 7th, 2025

முள்ளிபொத்தனை , கிண்ணியா, தம்பலகாம பிரதேச விவசாயிகளின் நீண்ட கால பிரச்சினைக்கான தீர்வும், நலனுக்கான வேலைத்திட்டமும்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுத் இணை தலைவம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் நீர்ப்பாசன அமைச்சர் விஜிதமுனி சொய்சா அவர்களினால் இவ்வருடத்திட்கு ஆரம்ப கட்டம் 82 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தினால் வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றது.

மேலும் அடுத்தவருடம் இதன் தொடர்ச்சியான வேலைத்திட்டங்களுக்கு 118 மில்லியன் ரூபா ஒதுக்கி தருவதாக நீர்ப்பாசன அமைச்சர் விஜிதமுனி சொய்சா உறுதியளித்துள்ளார்கள்.

இதன்மூலம் வன்னியனார்மடு, புளியடிகுடா, பக்கிறான் வெட்டை விவசாய சம்மேளன பிரிவுகளின்
நீர்பாசனம், வடிச்சல் , ரெகுலடோர் அமைக்கப்டவிருக்கின்றது.

Related Post