அப்பாவின் ஆபரேஷனுக்கு 46 லட்சம் நிதி திரட்டிக்கொடுத்த இன்டர்நெட்டின் செல்லக் குழந்தை

இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருமே நிச்சயம் வாழ்வில் ஒருமுறையாவது வெற்றிக்குறி காட்டும் சம்மியின் புகைப்படத்தை பார்த்திருப்பார்கள். 2007-ம் ஆண்டு இன்டர்நெட்டில் வலம் வந்த ‘தி சக்சஸ் கிட்’ என்ற ‘மேமே’ வைரல் ஹிட்டானது. அந்த புகைப்படத்தில் இருந்த கொழு கொழு குழந்தை சம்மியை அனைவரும் ரசித்தார்கள்.

இந்த சக்சஸ் கிட்டின் அப்பா ஜஸ்டினுக்கு கடந்த மாதம் உடல் நலம் குன்றியது. மருத்துவர்கள் அவரது சிறுநீரகம் செயலிழந்திருப்பதாக தெரிவித்தனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை உருவானது. ஆபரேசன் செலவுக்கு பல லட்ச ரூபாய் தேவைப்பட்டது. என்ன செய்வது என்று யோசித்த அவரது மனைவி இணைய வாசிகளின்(நெட்டிசன்கள்) உதவியை நாடினார்.

பிரபல நிதி திரட்டும் வலைதளமான GoFundMe-யில் கடந்த 8-ம் தேதி, தன் கணவரின் சிகிச்சைக்கு நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டு அதற்காக ஒரு பக்கத்தையும் உருவாக்கினார்.

அவர் எதிர்பார்த்திருந்த தொகையோ 75000 (46 லட்சத்து 78 அயிரம் ரூபாய்) டாலர்கள். ஆனால் அதற்கு மேலும் அள்ளிக்கொடுத்துள்ள நெட்டிசன்கள் சம்மியின் மீதும் அவர் தந்தை மீதும் உள்ள தங்களின் அன்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.