அமெரிக்க அப்பிள்களை வாங்காதீர்கள்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கரமெல் அப்பிள் பழங்களை எவரும் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவற்றை எந்த வியாபாரிகளும் விற்பனை செய்யவும் கூடாது என்றும் அறிவித்துள்ள சுகாதார அமைச்சு இறக்குமதியாளர் அவற்றை மீள எடுத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஒருவகைக் கிருமி தொடர்பான நோய் கட்டுக்கடங்காமல் பரவியுள்ளதனால் இலங்கையில் அது பரவுவதைத் தடுக்க இந்த வழிமுறை கையாளப்பட்டுள்ளது என்று ணுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பி.ஜி.மகிபொல தெரிவித்தார்.

இந்த வருட ஆரம்பித்திலிருந்து லிஸ்ரெறியா மனோசைரோஜஸ் எனும் கிருமி சம்பந்தமான நோய் பரவியுள்ளது என அமெரிக்கா மற்றும் கனடாவில் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.