Breaking
Fri. Dec 5th, 2025

அமெரிக்காவின் ராணுவப் படை ஒன்று அரபு நாடான பக்ரைன் நாட்டில் முகாமிட்டுள்ளது. இதில் கடற்படை பிரிவில் இயங்கி வந்த 6 போர் விமானங்கள் அமெரிக்காவுக்கு திரும்பி சென்றன.

6 விமானங்களும் இங்கிலாந்தில் உள்ள ஷிலே என்ற இடத்தில் தரையிறங்கிவிட்டு பின்னர் புறப்பட்டு செல்வதாக இருந்தது. அதற்காக அவை இங்கிலாந்தில் பறந்து கொண்டிருந்தன. தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு அதில் ஒரு போர் விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிரிழந்தார்.

இந்த விபத்து நடந்ததையடுத்து மற்ற 5 விமானங்களும் திசை திருப்பி விடப்பட்டு லூசிமவுத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன. பின்னர் அவை அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றன.

By

Related Post