Breaking
Mon. Dec 15th, 2025

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை விட சிறந்த மக்கள் பண்புகளை கொண்டவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் எனவே தான் கொழும்பு மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இ்லங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து எனது கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள கொழும்ப மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன்,தமிழர் எம்மை பொருத்த வரையில் மயில் சின்னம் என்பது கடவுள் பயணிக்கும் வாகனம் என்றும் கூறினார்.

தனியார் தொலைக்காட்சி அரசியல் விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போது நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த அரசாங்கத்திற்கு நானும் ஆதரவளித்தேன்.வரவு செலவு திட்டத்தின் போது.அதன் மூலம் கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளின் உள்ளக அபிவிருத்திக்கு என பல கோடி ரூபாய்களை பெற்றுக் கொடுத்தேன்.அதே போல் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கு எனது அதிகாரத்தை பயன்படுத்தினேன்.அதே போல் கல்விக்காக அதிகமாக உதவிகளை அரசாங்கத்திடமும்,மேல் மாகாண முதலைமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க ஆவர்கள் ஊடாகவும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.அரசாங்கம் தவறு செய்தால் அதனை பிழையென்று சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நான் அதிகம் கவனம் செலுத்திவருகின்றேன்.தமிழர்களின் கட்சி என்று கூறுபவர்கள் இரட்டைக் கொள்கைகளை கொண்டவர்களாக இருப்பதையும் நான் பார்க்கின்றேன்.என்னை பொருத்தவரையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர் சார்ந்த சமூகத்துக்கும் பணியாற்றுகின்றார்.

வடக்கில் வாழும் ஏனைய மக்களுக்கும் பணியாற்றுகின்றார்.அதே போல் தலை நகர் கொழும்பு உட்பட வடக்கு,கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கும் எனது பணி இடம் பெறுகின்றது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன் மேலும் கூறினார்.

Related Post