Breaking
Sat. Dec 6th, 2025

அஸ்ரப் ஏ சமத்

முன்னாள் அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவன்ச மற்றும் பேரியல் ;அஸ்ரப் மற்றும் காலம் சென்ற அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப் ஆகியோர்கள் கபினட் அமைச்சர்களாக பதவி வகித்தபோது வாழ்ந்த கொழும்பு 7 ஸ்டோமோ கிரசன்ட் வீதியில் உள்ள வாசஸ்தலத்தை இன்று வீடமைப்பு சமுத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச இவ் வீட்டை மீள அமைச்சின் செயலாளாருக்கு பொறுப்பளித்தார்.

இவ் வீட்டுகாக பல மில்லியன் ரூபாய்களை செலவழித்து கடந்த காலத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச அழகுபடுத்தியுள்ளார்.

அமைச்சினால் வருடம் ஒன்றுக்கு 2 மில்லியன் ருபா வாடகை, பாராமரிப்புச் செலவு, நிர்விநியோக கட்டணம். மிண்சாரம் தொலைபேசி மற்றும் மின்சாரப் பாவணைப் பொருட்களுக்காகவும் பல மில்லியன் ரூபாக்கள் அரச நிதி செலவளிக்கப்பட்டுவருகின்றது.

அத்துடன் இவ் வீட்டில் 4 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், 3 தொழிலாளர்கள் அவர்களது சம்பளம். மேலதிக கொடுப்பணவுகளையும் அமைச்சு வழங்குகின்றது.

ஆகவே இந்த வீட்டுக்காக வருடாந்தம் செலவழிக்கும் 2 மில்லியன் ரூபாவையும் ஏழைகளுக்காக நிர்மாணிக்கும் செவன வீட்டுத்திட்டத்திற்கு இந் நிதியை வழங்குமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச தனது செயலாளர் விமலசிறி பெரேராவை வேண்டிக்கொண்டார்.

அத்துடன் வீட்டுக்கான திறப்புக்களையும் மீள பொதுநிருவாக அமைச்சிடம் ஒப்படைக்குமாறும் அமைச்சர் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Post