அஸ்ரப் ஏ சமத்
கொழும்பில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லீம் பெண்கள் ஒவ்வொரு புதன்கிழமையிலும் அமைச்சுக்களின் படிகளேறி சீரழிகின்றனர்
கொழும்பில் அரசாங்கத்தினால் வழங்கும் வீடொன்றை பெற்றுக்கொள்வதற்காகவும், அல்லது தனது பிள்ளையை அரச பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்காக அமைச்சுக்களின் படிகள் ஏறி ஏறி வரிசையில் காத்து நின்கின்றனர்.
ஆனால் இந்தப் பெண்களின் கனவன்மார்கள் தமது மனைவிமார்களை அமைச்சுக்களுக்கு அனுப்பி சீரழியவைத்து விட்டு அவர்கள் வீடுகளில் அல்லது வியாபாரத்தில் தங்கி நிற்கின்றனர்.
இந்தப்பெண்கள், வரிசையில் மணித்தியாலயக்ககணக்கில் சிலர் காத்துநிற்கின்றனர். சிலர் கைக்குழந்தைகளுடன் அபாயர் அணிந்த பெண்கள், பேஸ்கவர் அணிந்த பெண்கள், மற்றும் கொழும்பில் முடுக்கு வீடுகளில் வாழும் தமிழ்ப் பெண்களும் இவ்வாரே சீரழிகின்றனர். அவர்கள் முண்டியடித்து சண்டையில் ஈடுபடுகின்றனர். சிலர் மயக்கமுறுகின்றனர். அவர்களது கைகளில் ஆகக் குறைந்தது ஒரு மனுவைக் கூட எழுதத் தெரியாமல் அங்கு இங்குமாக அலைகின்றனர்.
வீடொன்றைப் பெற்றுக் கொள்ள கடிதமொன்றை அமைச்சரிம் சமர்ப்பித்து தனது கண்னீர் கதைகளை வடிக்கின்றனர். ஆனால் அந்த அமைச்சுக்களில் உள்ள அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த கடிதத்தை பெற்றுவிட்டு கொழும்பில் வீடுகட்டும்போது பதில் அனுப்புகின்றோம். என அனுப்பி வைக்கின்றனர்.
வீடமைப்பு அமைச்சர் சொல்லுகின்றார். தனக்கு கொழும்பில் வீடுகட்டுவதற்கு தனது அமைச்சில் அதற்குரிய நிதி இல்லை. கிராமிய வீடுகளுக்காக மட்டும் 1 இலட்சம் ருபா வட்டியுடன் வீடமைப்பு கடன் மட்டுமே எனக்கு வழங்க முடியும் எனச் சொல்லுகின்றார்.
நகர அபிவிருத்தி நீர்விநியோக அமைச்சுக்கு சென்ற பெண்கள் கூறுகின்றனர். அங்கு சென்றால் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்தான் வீடுகள் தரக் கூடிய அமைச்சர் என்று சொல்லி இங்கு அனுப்புகின்றனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளைச் சந்தித்தால் – நாங்கள் வீடுகள் கொழும்பில் உடைக்கும்போது கடிதம் தந்திருப்போம் அவர்களுக்குரிய வீடுகளை மட்டுமே வீடுகள் நிர்மாணிக்கின்றோம். வீடுகட்டி முடிய இன்னும் 2 வருடம் செல்லும் அதன்பிறகு வீடுகள் தருவோம். என அவர்கள் சொல்லுகின்றனர்.
கொழும்பு மத்திய தொகுதியைச் சேர்ந்த பெண் -கருத்துக் கூறுகையில் – சேரிப்பு புரத்தில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். இந்த அரசாங்கத்தினையும் ஜனாதிபதியை மாற்றுவதற்கு கொழும்பு வாழ் சிறுபான்மை மக்களே 90 வீதம் வாக்கழித்தோம். எங்களுக்கு வீடு கிடைக்கும், தொழில் கிடைக்கும், எனது பிள்ளைக்கு அரச பாடசாலைகளில் அனுமதி கிடைக்கும் எனறே இந்த ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு வாக்களித்தோம். ஆனால் ஒன்றுமே கிடைத்ததாக தெரியவில்லை.
மட்டக்குழியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் – கருத்து – நாங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்குழியில் வைத்து முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை அழைத்து வந்து நகர அபிவிருத்தி அதிகாரிகள் ஊடாக கொழும்பில் வீடற்ற தமிழ் குடும்பங்களது 7ஆயிரம் விண்ணப்படிவத்தை கையளித்தார்.
கோட்டபாய அன்று எங்கள் முன் கூறுகையில் – கொழும்பில் வீடற்று இருக்கும் ; 80ஆயிரம் மக்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகள் நிர்மாணிக்கபட்டு வருகின்றன.
ஒவ்வொரு வீடும் 550 சதுர அடி தொடர்மாடி வீடுகள் தரப்படும். வீடுகள் உடைத்தவர்களுக்கு கொம்பனிவீதியில 400 வீடுகள் கொடுக்கப்படும். பொரளை, கிராண்பாஸ், தெமட்டக்கொட, மாளிகாவததை, மட்டக்குழி, கொலநாவதை, போன்ற பகுதிகளில் தொடர்மாடி வீடுகள் நிர்மாணிக்கபட்டு சகலருக்கும் வீடு தரப்படும் எனக் கூறி எங்களது விண்ணப்பங்களை தொகையாகப் பெற்று நகர அபிவிருத்தி அதிகாரிகளிடம் கையளித்தார்.
ஆனால் அரசு மாறிவிட்டது புதிய அரசில் எங்களது விண்ணப்பங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவே இ;ங்கு வந்தோம்.
அமைச்சர் சஜித் பிரேமதாச சொல்லுகின்றார்- கொழும்பில் வீடு தேவையென்றால் அமைச்சர் ஹ்ககீமிடம் செல்லுங்கள் என அவர் கூறுகின்றார்.
அமைச்சர் ஹக்கீம் சென்றால் அவர் சொல்லுகின்றார்;- வீடமைப்பு அமைச்சர் சஜீத் அவரிடம்தான் போய் வீடு கேட்கவேண்டும் என்று சொல்லுகின்றார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையில் வீசேட திட்டம் உள்ளது அங்கு சென்று அந்த அதிகாரிகளிடம் சென்றோம். அங்கு வட கிழக்கில் இரானுவ அதிகாரிகளாக இருந்தவர்களே மீள அந்த அதிகார சபையில் 800 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னாள் கோட்டாபாயவின் அதிகாரிகள.; அவர்கள் எந்த உண்மையும் தகவலையும் எங்களுக்கு சொல்லுவதில்லை. நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தால் அவாகள் எங்களை பழிவாங்குகின்றனர்.

