அமைச்சர் ரிசாத் பதியுதீன் மூர்வீதி மற்றும் தலைமன்னார் மக்களுடனான சந்திப்பு

-எம்.சுஐப்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வடமாகாணத்திலிருந்து வெளியேறி கொழும்பிலே வாழும் யாழ்ப்பாணம் மன்னார் மூர்வீதி, தலைமன்னார் மக்களை கொழும்பில் சந்தித்தபோது  ஆற்றிய உரையின் தொகுப்பு

 நாமெல்லாம் அஷ்ரப் அவர்களின் காலத்திலே முஸ்லிம் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர்கள். வடபுலத்திலே மு.காவை வளர்த்தவர்கள். தேர்தல்களில் மு.காவை  ஆதரித்து உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பினோம். அஷ்ரப் அந்த உதவியை மறக்கவில்லை. வடபுல மக்கள்மீது நன்றியுள்ளவர்களாகவே வாழ்ந்தார். 1990ம் ஆண்டு நாம் வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அகதியானோம். 1994இல் ஆட்சி மாறியது. அஷ்ரப் அமைச்சரானார்.

 அந்த நல்ல மனிதர்தான் நமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி ஆதரவளித்தார். அஷ்ரப் இறையடி சேர்ந்தார். அதன்பின்னரான மு.கா அகதிகளின் நல்வாழ்வு தொடர்பாக எந்த கரிசனையும் கொள்ளவில்லை. எமது தேவைகள் கவனிக்கப்படவுமில்லை எமது அபிலாஷைகள் நிறைவேற்றப்;படவுமில்லை. மு.கா ஒரு முஸ்லிம் கட்சி. முஸ்லிம்களின் துன்ப துயரங்களை போக்கவேண்டிய ஓர் அமைப்பு. இந்த அமைப்பு இன்னல்பட்ட வடபுல மக்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எமது மக்களின் இன்னல்களை போக்க எந்தவொரு செயற்திட்டத்தைதானும் அமுல்படுத்த மு.கா தவறிவிட்டது.

 ஏழைக்குடும்பத்தில் பிறந்த நான் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி துவண்ட நான் இறைநாட்டத்தால் எம்.பி யானேன். அதுவும் அகதி முகாமில் இருந்துகொண்டே மு.கா வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். அகதிகளின் பிரதிநிதியாகவே பாராளுமன்றம் சென்றேன். அகதி மக்கள் அல்லாஹ்வால் நமக்கு கிடைத்த அமானச்சீவன்கள் எண்ணினேன். கொழும்பிலிருந்து கொண்டு துரைத்தனத்து அரசியல் நடாத்திய மு.காவை விட்டு வெளியேறினேன். எனது மக்களுக்காக எனது ஆற்றலை அறிவை பயன்படுத்த வேண்டும் என்ற வீச்சினால் புதிய கட்சியை அமைத்தேன்.

 மு.கா வின் நடவடிக்கைகளினால் வெறுப்புற்ற புத்திஜீவிகள் பலர் என்னுடன் இணைந்து கொண்டனர். யாரும் எதிர்பாராதவிதமாக நாம் உருவாக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று பாரிய விருட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது. ஓன்றில் ஆரம்பித்த இந்தக்கட்சி இன்று இலட்சக்கணக்கான ஆதரவாளர்களை பெற்றுள்ளது. வடபுல மக்களின் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்ற ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இதய சுத்தியுடனும் இரவு பகலாக உழைத்ததன் விளைவே நாம் இன்று வளர்ச்சி கண்டதற்கு பிரதான காரணம்.

 இப்போது எமது கட்சியில் கபினட் அந்தஸ்துள்ள ஓர் அமைச்சரும் பிரதியமைச்சர் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஆட்சி மன்றில் அங்கம் வகிக்கின்றோம்.

 வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் ஆறு பிரதிநிதிகளையும் உள்ள10ராட்சி சபைகளில் 61 பிரதிநிதிகளையும் எமது கட்சி பெற்றுள்ளது. நாம் ஏழைகளின் தோழனாக இன்னலுற்றவருக்கு உபகாரியாக வாழ்ந்து வருவதனால் இறைவன் எம்மீது கருணை மழை பொழிகிறான்.

 புத்தளம் மண்ணில் வாழும் வடபுல மக்களின் வாழ்வை சிறப்பாக்க நாம் ஆற்றிவரும் பணிகள் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அகதியாக வந்து இப்போது கொழும்பில் வாழ்க்கை நடாத்தியபோதும் அங்கு அடிக்கடி சென்றுவருவதை நான் அறிவேன்.

 புத்தளத்தில் நீங்கள் குடியேற்றக்கிராமங்களை சுற்றி வரும்போது நாம் கட்டிய கட்டிங்களே வானோங்கி நின்று எமது பண்பின் சின்னமாக மிளிருகிறது. சொந்தம் பந்தம் என்ற பேதமின்றி கிராமியவாதம், பிரதேசவாதம் இல்லாது அணைத்து கிராமங்களின் இளைஞர் யுவதிகளுக்கும் நாம் முடிந்தவரை தொழில் வழங்கியுள்ளோம்.

 இன, மத, பேதமின்றி வடபுலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் எமது சேவை கிடைத்திருக்கின்றது எனவேதான் இந்துää கிறிஸ்தவ மக்கள் பெருமளவில் எனக்கு வாக்களித்து என்னை பிரதிநிதியாக்கினர். போர் முடிவுற்றது எமது மக்களை சொந்த மண்ணில் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

 இருபத்தி நான்கு ஆண்டுகளாக காடாகிய கிராமங்களில் காடழிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை செய்யவும் நாம் படாதபாடு படுகிறோம். புலிகளின் இன சுத்திகரிப்பினால் பாதிக்கப்பட்ட நாம் இப்போது  எமது சொந்த மண்ணில் குடியேறும்போது பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புக்கள் எமக்கெதிராக பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். எமது சொந்த தாயகத்தில் நாம் பிறந்து வளர்ந்த ப10மியில் நாம் சென்று குடியேறுவதற்கு எவரும் எம்மை தடுக்க முடியாது.

 மீள்குடியேற்றும் முயற்சிகளில் நாம் ஈடுபடும்போதெல்லாம் என்கெதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நான்பட்ட அவஸ்த்;தைகள்ää அவமானங்கள் ஏராளம். ஏச்சுக்களுக்கும், பேச்சுக்களுக்கும் மட்டுமே ஆளாகி வந்த நான் நீதிமன்றத்திலும் நிறுத்தப்பட்டேன்.

 எனது மக்களுக்காக குரல் கொடுத்தமமைக்காக நான் இத்தகைய துன்பங்களை அனுபவித்தபோதும் ஒருபோதும் மக்கள் பணியிலிருந்து ஒதுங்கமாட்டேன்.

 தேர்தல் காலங்களில் மட்டும் வீராப்பு பேசுபவனாகää சமூக அக்கறை கொண்டவனாக நான் என்றுமே செயற்பட்தில்லை. செயற்படவும் மாட்டேன். சுமூகக் கட்சியென்று பிதற்றித்திரியும் அமைப்புகளின் போலித்தனத்தையும் எமது கட்சியின் அளப்பரிய பணிகளையும் நன்கு அறிவார்கள்.

 வடக்கு கிழக்கிலே மட்டும் அரசியல் பணி செய்த நாம் கொழும்பலும் காலூன்ற வேண்டிய தேவை-நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. கிராண்ட்பாஸ், தெமட்டகொடை, தெஹிவளை சம்பவங்களால் நீங்களும் பாதிக்கப்பட்டவர்கள். முஸ்லிம் சமூகத்;தின் மீதான அடக்குமுறைகளையும் அடாவடித்தனங்களையும் ஏனையோரைப்போன்று சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற காரணத்தினால்தான் களத்தில் இறங்கி மக்ளோடு மக்களாக நின்று தடுத்தோம்.

 எனினும் அந்த சம்பவங்களின் போது கொழும்பிலே எமக்கென்று ஓர் அரசியல் பலம் தேவையென்ற நிலையை உணர்ந்தபோதுதான் மேல்மாகாண சபை தேர்தல் வந்தது களத்தில் இறங்கி உங்கள் முன் வந்திருக்கின்றோம் நாம் அரசாங்கத்தில் அங்கம் வகித்தபோதும் அரசில் அமைச்சராக இருந்தபோதும் எமது சமூகத்தின்மீதான வக்கிரங்களை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தட்டிககேட்போம்.

 மன்னாரில் பிறந்த நீங்கள் கொழும்பில் வாழுகின்றபோதும் உங்களுக்கென்று ஓர் அரசியல் சரித்திரம் உண்டு மர்ஹ_ம் எம்.எஸ்.ஏ.றஹீமை எம்.பியாக்கிய பெருமை உங்கள் மூர்வீதி மண்ணுக்கு உண்டு.

அந்த காலகட்டத்தில் தாரபுரம், எருக்கலம்பிட்டி, விடத்தல்தீவு, முசலி, சிலாவத்துறை, பண்டாhரவெளி, புதுக்குடியிருப்பு, பெரியமடு போன்ற கிராமங்களில் வாழ்ந்த மக்கள் எந்த பேதமுமின்றி அந்த பெருமகனுக்கு வாக்களித்து உங்களுக்கு தோல் கொடுத்தனர். அதேபோன்று கொழும்பிலே எமது கட்சி காலூன்ற உங்கள் ஒத்துழைப்பு தேவை.

 விரட்டப்பட்ட நமது மக்களின் வாழ்விலே மாற்றமும் மறுமலர்ச்சியும் தேவை அத்தகைய மறுமலர்ச்சியும் மறுவாழ்வும் சொந்த மண்ணிலேதான் சாத்தியப்படும்.

 எனவே இடம்பெயர்ந்த வடபுல மக்கள் மீண்டும் தமது சொந்த தாயகத்தில் குடியேறவேண்டுமானால் நமக்கு சிறந்த அரசியல் பலம் வேண்டும் அந்த அரசியல்பலத்தை நாம் பெற்றுக்கொள்வதற்கும். கொழும்பிலே வாழும் உங்களைப்போன்ற சகோதரர்களின் நல்வாழ்வுக்கும் நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரிக்க வேண்டிய கடப்பாடு நிறைய உண்டென நான் பெரிதும் நம்புகிறேன்.

moor1.jpg2