அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மறிச்சுக்கட்டிக்கான உள்ளக வீதிகள் புனரமைப்பு!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மன்னார் மறிச்சிக்கட்டி கிராமத்தின் உள்ளக வீதிகளின் புனரமைப்புப் பணிகள் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டன.

அமைச்சரின் இணைப்பாளரும்,  பிரதேச சபை உறுப்பினருமான முஜாஹிரின் தலைமையில்,  13.3 மில்லியன் ரூபாய் பெறுமதியில்,  உள்ளக வீதிகளுக்கான தார் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.