‘அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட பானகமுவ புதிய மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்தவும்’ என்.எம்.நஸீர்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பானகமுவ மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்த பாடசாலை தக்கியா மக்தப் கட்டிட வேலைகளை மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்தலைவரும்  குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் நேற்று  (20) நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இதன் போது மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துமாறு ரிதீகம மக்கள் காங்கிரஸ் பிரதேசசபை உறுப்பினர் அஸ்ஹர் அவர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் பிரதேச  சபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.