Breaking
Sun. Dec 7th, 2025

மாந்தை பிரதேச சபைக்குட்பட்ட சொர்ணபுரி கிராமத்திற்கு பாதை மற்றும் பாடசாலைக்கான மதில் போன்றவை அமைப்பதற்கான நிதியினை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழங்கியுள்ளார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் மீள் குடியேற்ற செயலணியின் இணைத்தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட பாதை மற்றும் பாடசாலை மதில் போன்றவற்றின் வேலைப்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இதனைத்தொடர்ந்து வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்காக அமைச்சரின் பணிப்புரையின் கீழ் மன்னார் மாவட்ட மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப்  மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் ஆகியோரும் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது

Related Post