Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், மீள்குடியேற்றத்துக்கான விஷேட வடக்கு செயலணியினால் யாழ். ஜின்னா மைதான பார்வையாளர் மண்டபம் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த புனரமைப்பு வேலைகளை யாழ் மாநகர சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான கே.எம் நிலாம் கடந்த சனிக்கிழமை (22) பார்வையிட்டார்.

குறித்த பார்வையாளர் மண்டபம் செயலணியில் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படுகின்றது.

மேலும், இவ் விளையாட்டு மைதானத்துக்கான மின்னினைப்பு உள்ளிட்ட யாழ் ஒஸ்மானியா கல்லூரி அபிவிருத்திக்காக 2017 ஆம் ஆண்டு, சுமார் பல மில்லியன் ரூபா செயலணியின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டு, வேலைத்திட்டங்கள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post