Breaking
Mon. Dec 15th, 2025

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட்  பதியுதீனின் நேரடி தலையீட்டால் புத்தளம் தளவைத்தியசாலைக்கு 44 தாதிமார் நியமனம் பெற்று வந்துள்ளனர்.

புத்தளம் இளைஞர் அமைப்பினரும், வைத்தியசாலை அபிவிருத்தி சங்கமும் தாதிமார் பற்றாக்குறையை தீர்க்க அயராது பாடுபட்டனர்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலில், எம்.எச்.எம் நவவி எம்.பியின் முயற்சியில், 1000 மில்லியன் ரூபா பெறுமதியான சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்ட வரைபு  தயாரிப்பு இறுதிக்கட்டத்தில்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Post