Breaking
Fri. Dec 5th, 2025

“யாழ் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், சுய தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான உதவித் திட்டங்கள், கடனுதவி வழங்கல், மற்றும் தையல் பயிற்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கல் ஆகிய தொடர்பில் கைத்தொழில் வர்த்தக அமைச்சு அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ள அங்குரார்ப்பண விழா பற்றிய உயர்மட்டக்கூட்டம் இன்று (16) காலை யாழ் கச்சேரியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிதீன், கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் நெடா அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இந்த எழுச்சி விழாவில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், கௌரவ அதிதிகளாக அமைச்சர்களான மங்கள சமரவீர, ரிஷாட் பதியுதீன் மற்றும் முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன், உட்பட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிட்தக்கது.

-ஊடகப்பிரிவு-

Related Post