ஊடகப் பிரிவு
மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பஸ் டிப்போக்களுக்கான புதிய பஸ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தில் இடம் பெற்றது. போக்குவரத்து.நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரன்ஜித் மத்துமபண்டார,பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த பஸ் வண்டிகளை டிப்போ முகாமையளார்களிடத்தில் கையளித்தார்.
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கும்,போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் ஏற்கனவே போக்குவரத்து அமைச்சில் இடம் பெற்ற சந்திப்பினையடுத்து இந்த பஸ் வண்டிகள் வழங்குவதற்காக உறுதியினை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடத்தில் போக்குவரத்து அமைச்சர் வழங்கியிருந்தார்.
நேற்று இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் தௌபீக்,வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,செல்வம் அடைக்கலநாதன்,முத்தலிபாவா பாருக்,வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன்,சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ,முசலி பிரதேச சபை பிரதி தவிசாளர் பைரூஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


