கிண்ணியா ஜிப்ரி
மதிப்புக்குறிய அமைச்சர் றிசாட் பதியுத்தீன் இலங்கை முஸ்லீம்களின் அதி சிறந்த அரசியல் தலைவர்களின் ஒருவர் அவர் ஏனைய தலைவர்களின் நன் மதிப்பையும் நம்பிக்கையும் வென்றவர். எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவராக இருந்து ஒரு சிறந்த தலைமைத்துவ நெறியாலுகையினால் உலகிலுள்ள 500 தலைவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் நமது இலங்கை மண்ணுக்கும் தமிழ் பேசும் சமூகத்திக்கும் பெருமை தேடித்தந்தவர் இவ்வாராண ஒரு தலைவர் மீது ஊழல் குற்றச் சாட்டு சுமத்துவது என்பது மிகவும் வேதனை தரக்கூடிய செயலாகும் இவ்வாறு கிண்ணியா நகர சபையின் நகர பிதா ஹில்மி மகரூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெறிவிக்கையில் அவர் ஒரு சிறந்த பண்புகளும் மற்றும் ஆளுமையும் அரசியல் நாகரிகமுமிக்க அமைச்சர் றிசாட் பதியுத்தீன் தனது சேவையினால் நமது நாட்டின் அகதிகளின் நலன்புரி விடயத்தில் பலரும் பாராட்டக்கூடிய வகையில் தனது சேவையினை ஆற்றி மக்களினதும் அரசாங்கத்தினதும் நன் மதிப்பை பெற்றுருக்கின்றார் இத்தகைய ஒருவர் மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு அறிக்கை சமர்ப்பிக்க எப்படித் தான் அவருக்கு மனது வந்ததோ தெறிய வில்லை.
வட பகுதியில் எந்த ஒரு முஸ்லீம் தலைமையும் செய்திடாதே பல்வேறு சேவைகளை தனது அயராத உழைப்பின் மூலமாக செய்துள்ளார் . மேலும் பல சேவைகளை செய்து கொண்டுயிருக்கின்றார் இதனை அப்பகுதி மக்களும் ஏனையோரும் நன்கறிந்தது.
தனது உன்னத தன்மையினால் மக்களது மனங்களை வென்றெடுத்த ஒரு தலைவராக திகழ்வது நமக்கெல்லாம் சந்தேசத்தையும் மன மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.
எமது மதிப்புக்குறிய அமைச்சர் றிசாட் பதியுதீன் அபரிதமான அரசியல் வளர்ச்சி பயணத்தைக் கண்டு மனப் புளுக்கம் கொண்டவர்கள் அதை முறியடித்து அவர் மீது சேறு பூசுவதற்காக எடக்கப்பட்டிருக்கின்ற இத்தகைய முயற்சி கண்டிக்கப்பட்டதாகும்.
உண்மையான நடு நிலையில் நின்று சிந்திப்பவருக்கு எமது அமைச்சரயும் அவரது தூய பணிகளையும் நன்கு புரியும் என கிண்ணியாவின் நகர சபையின் தவிசாளர் ஹில்மி மகரூப் வெளயிட்டுள்ள அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.

