அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனையின், வழிநடத்தலின் பிரகாரம் மாவடிப்பள்ளியிலுள்ள மக்களின் கண் பார்வைப் பிரச்சினைக்கான சிகிச்சையும் இலவச மூக்குக் கண்ணாடியும் வழங்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழுவின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.30 மணியளவில் மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி ஜெமீல் அவர்கள் கலந்து சிறப்பித்து இலவச மூக்குக் கண்ணாடிகளையும் வழங்கிவைத்தார். இந் நிகழ்வில் உறையாற்றிய கலாநிதி ஜெமீல் அவர்கள் எமது மண்ணுக்கும் சமூகத்திற்கும் அநியாயம் விளைவித்த முஸ்லீம் காங்கிரஸில் என்னை மீண்டும் இணைப்பது என்பது பகல் கனவாகும், எனது அரசியலாக இருக்குமென்றால் அந்திம காலத்திலும் எப்போதும் அகில இலங்கை மக்கள் காங்கிரசாகவே இருக்குமே ஒழிய எந்த மாற்றுக் கட்சியும் இல்லை என்றும், முஸ்லீம் சமூகத்திற்காக பிராந்தியத்திலும் நாட்டிலும் தேசியத்திலும் சர்வதேசத்திலும் போராடவேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கின்ற அந்த தலைமை றிஸாட் பதியுதீனை நான் என்றுமே இலக்கமாட்டேன் அவருக்கு விசுவாசமாகவே இருப்பேன் அவருடைய கையை பலப்படுத்தி எனது மரணம் வரை இருப்பேன் என்று ஆணித்தனமாக உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மகளிர் சங்கம் ஒன்றைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறிந்து உடனடியாக தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்தார்.


