ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களை ஒரே மேடைக்கு கொண்டுவர முடியுமாவென அரசாங்கத் தரப்பினர் விடுத்த சவாலை வெற்றிகொண்டது போல் அரசமைக்கும் சவாலையும் வெற்றிகொள்வேனென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார். பதுளை வியலுவ தேர்தல் தொகுதியில்அவர் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

