Breaking
Sun. Dec 7th, 2025
இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவிற்க்கு கொண்டு வருவதற்க்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் மாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள பொதுபலசேனாவின் தலைவர் கிரம விமலஜோதி, இலங்கை ஒரு பல்லின நாடால்ல அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஒரு பௌத்த நாடு, பௌத்த நாட்டில் அது இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின்  அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.
பௌத்தர்களின் கரிசனைகள் குறித்த ஆவணமொன்றை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம், அரசாங்கம் அதற்க்கு தீர்வை காணவிட்டால் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என  குறிப்பிட்டுள்ளார்.

Related Post