Breaking
Mon. Dec 15th, 2025

மது­சார உற்­பத்தி மற்றும் விற்­பனை நிலை­யங்­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் இனி­வரும் காலங்­களில் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­மாட்­டாது. தேவை­யேற்­படின் வழங்­கப்­பட்­டுள்ள அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் தொடர்பில் மேல­தி­க­மான வரி­களை விதித்து அவற்றை மீளப்­பெற்றுக் கொள்­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை அமர்­வின்­போது வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் அனு­ர­கு­மார திசா­நா­யக்க எம்.பி.யினால் எழுப்­பப்­பட்ட இடைக் கேள்­வி­யொன்­றுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

முன்­ன­தாக கேள்­வி­யெ­ழுப்­பிய ஜன­நா­யக தேசியக் கூட்­டணி எம்.பி.யான அனு­ர­கு­மார திசா­நா­யக்க கூறு­கையில்,

மது­பான உற்­பத்தி விநி­யோகம் மற்றும் விற்­பனை ஆகி­ய­வற்­றுக்கு முன்­னைய அர­சாங்கம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் அவர்­க­ளுக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்கும் அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை வழங்­கி­யுள்­ளது.

இதன் கார­ண­மா­கவே வரிகள் செலுத்­தப்­ப­டாத நிலை­மைகள் ஏற்­பட்­டுள்­ளன. எனவே மது­சார உற்­பத்தி விநி­யோகம் மற்றும் விற்­பனை ஆகி­ய­வற்றை மையப்­ப­டுத்தி எதிர்­கா­லங்­களில் அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் வழங்­கும்­போது அமைச்­சர்கள் உள்­ளிட்ட அர­சி­யல்­வா­திகள் புறக்­க­ணிக்­கப்­பட வேண்டும். அத்­துடன் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் கிடைக்­கா­த­வண்ணம் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­குமா என்று கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இக்­கேள்­விக்குப் பதி­ல­ளித்த அமைச்சர் ரவி­க­ரு­ணா­நா­யக்க கூறு­கையில்,

அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மேற்­படி அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் நேர­டி­யாக வழங்­கப்­ப­டு­வது கிடை­யாது. எனினும் கடந்த ஆட்சிக் காலத்தில் அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் மறை­மு­க­மா­கவும் அதே­நேரம் தவ­றான முறை­யிலும் விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவ்­வா­றான அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை தடை­செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

எதனோல் வியா­பா­ரத்தைப் பொறுத்­த­வ­ரையில் ஜன­வரி மாதம் 8ஆம் திக­திக்கு முன்­ன­தாக அது பாரிய இலாபம் ஈட்டும் வியா­பா­ர­மாக இருந்­தி­ருக்க முடியும். எனினும் தற்­போது எதனோல் இங்கு தடை­செய்­யப்­பட்ட வியா­பா­ர­மாக இருக்­கி­றது. இவ்­வி­ட­யத்­திலும் அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் வழங்­கப்­ப­ட­மாட்­டாது.

இதே­வேளை பிர­தமர் இங்கு கூறு­கையில்,

மது­சாரம் தொடர்­பான எந்­த­வொரு அனு­ம­திப்­பத்­தி­ரத்­தையும் எந்­த­வொரு அரசியல்வாதிக்கும் நாம் வழங்கு வதற்குத் தயாரில்லை. வழங்கவும் மாட் டோம்.

இது தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொள்வோம் என்பதுடன் தேவை யேற்படும் பட்சத்தில் ஏற்கனவே விநியோகிக் கப்பட்டிருக்கின்ற அனுமதிப்பத்திரங் களுக்கும் மேலாக வரிகளை விதித்து அவற்றை மீளப்பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

Related Post