அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக இலஞ்சம்அல்லது ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு தோற்ற ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டமையானது எமது தலைவரினால் மேட்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டத்தையும் எமது கட்சியின் பாரிய வளர்ச்சியையும் கண்டு தாங்க முடியாதவர்களின் காழ்புணர்ச்சியின் உச்ச கட்டமே இந்த முறைப்பாடு என அகில இலங்கை மக்கள் காங்கிரசை பிரதிநிதிப்படுத்தும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் இஸ்மாயில் பதுருதீன் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இம்முறைப்பட்டானது 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியிடைந்த மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவரினாலேயே இம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது இதன் பின்னணியில் அரசியல் சில்லறைகள் தங்களின் காழ்புணர்ச்சியை வெளிபடுத்துகிறார்கள்இம் முறைப்பாடு தொடர்பில்அவசரமாகவும்துரிதமாகவும் விசாரணைகளை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு இந்த முடிவுகளை முன்வைக்குமாறு எமது தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவ் ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக்கொண்டள்ளார்அத்துடன் அவ் விசாரணைக்காகதான் பூரண
ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததிருக்கிறார். இந்த விசாரணை முடிவின் மூலம் அரசியல் காழ்புணர்ச்சிகாரர்கள் மூக்குடைந்து போகும் நிலை உருவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
வட மாகாணத்தில் இருந்து அப்பாவி முஸ்லிம் மக்கள் விரட்டி அடித்த நேரத்தில் இருந்து எமது தலைவர் அம்மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து அவர்களின் போதுத்தேவைகள்,வேலை வாய்ப்பு மற்றும் பிரதேச அபிவிருத்தி இவைகள் பூரணமாக நிறைவு செய்யப்பட்டு வருகிறது இது முழு நாட்டு மக்களுக்கும் அறிந்த உண்மை. அதேநேரம் பாதிக்கப்பட்ட வடமாகான முஸ்லிம் மக்கள் தொடர்பாக ஏனைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். வட மாகான மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை அம்மக்களின் முகத்தில் முழிக்க முடியாத, அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலைமை இருக்கின்றது இதன் விளைவே எமது தலைவருக்கு அரசியல் சேறு பூசும் படலம் ஆரம்பித்திருக்கின்றது இது நகைச்சுவையாக உள்ளது இதனை மக்கள் ஏற்பதற்கு ஒரு போதும் தயாரில்லை.
மேலும் எமது தலைவர் மா மனிதர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடமாகான மக்களுக்கு மாத்திரம் அல்லாமல் முழு நாட்டு மக்களுக்கும் சேவையாற்றி வருகிறார் இதனால் தற்போது மக்கள் மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாரிய வளர்ச்சிபாதையில் உள்ளது இதன் விளைவு இன்ஷா அல்லாஹ் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எட்டுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் போட்டி இட்டு அதிக பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என்ற செய்தியை எம் கட்சியின் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத காழ்புணர்சிக்கரர்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

