அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரிக்குமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை தேசிய தொழிற்சங்க மத்தியநிலையம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவால், அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முற்பணமானது போதாது எனவும் தற்போது வழங்கப்படும் முற்பணத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரித்து வழங்க வேண்டுமென்று அந்த கோரிக்கை கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

