Breaking
Thu. Dec 11th, 2025

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதனை முற்றாக தடைசெய்யவுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.

அரிசியை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவைகளும் காணப்படவில்லை என அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் அதிகளவிலான பணத்தை செலவிட்டு, வெளிநாடுகளில் இருந்து அளவுக்கதிகமாக அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் உள்நாட்டு செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நன்மைக் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காமினி ஜயவிக்கிரம பெரேரா கூறினார்.

Related Post