Breaking
Sun. Dec 7th, 2025
அல்காயிதா, இந்தியாவில் கிளையை துவக்கவிருப்பதாக கூறப்படும் வீடியோவை  வெளியிட்டுள்ள இணையதளம் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாதால் நிர்வகிக்கப்படும் நுண்ணறிவு பிரிவாகும்.ஸெர்ச் ஃபார் இண்டர்நேசனல் டெரரிஸ்ட் எண்டிடீஸ் என்பதன் சுருக்கமே ஸைட் ஆகும்.இந்த இணையதளத்தின் தலைவரான ரீத்தா காட்ஸும், ஜோஷ் ஸெவனும் 2002-ஆம் ஆண்டு வரை இஸ்ரேல் துவக்கிய ஒரு உளவு அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களாவர்.அதற்கு முன்பு காட்ஸ், இஸ்ரேல் ராணுவத்திலும் பணியாற்றியுள்ளார்.
பணம் வாங்கிக்கொண்டு ‘ரகசிய தகவல்களை’ அளிப்பதற்காக இருவரும் இணைந்து 2008-ஆம் ஆண்டு இணையதளத்தை துவக்கினர். சர்ச்சைக்குரிய பல தகவல்களையும் இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.ரீத்தா காட்ஸ், சைபர் கண்காணிப்பு உலகில் மர்மமான நடவடிக்கைகளுக்கு பிரசித்திப் பெற்றவராவார்.2008-ஆம் ஆண்டு போராளிகள் மேற்கத்திய உலகின் மீது அணு ஆயுதத்தை பிரயோகிக்க தயாராவதாக கூறும் ஒரு வீடியோவை இந்த இணையதளம் வெளியிட்டது.
பின்னர் அது ஒரு எலக்ட்ரானிக் கெயிலில் இருந்து பெறப்பட்ட காட்சிகளை காப்பியடித்தது என்பது நிரூபணமானது. இதுத்தொடர்பாக செய்தியை வெளியிட்ட லண்டனில் வலதுசாரி பத்திரிகையான டெய்லி டெலிகிராப் உடனடியாக இச்செய்தியை வாபஸ் பெற்றது.
அல்காயிதா தலைவராக பரப்புரைச் செய்யப்படும் அய்மன் அல் ஜவாஹிரியே ஒரு கற்பனை உருவாக்கம் என்றும் அல்காயிதாவின் பெயரில் சி.ஐ.ஏ சில ‘மோசமான தந்திரங்களை’ பிரயோகிப்பதாக எஃப்.பி.ஐயில் இருந்து ராஜினாமாச் செய்த சிபல் எட்மண்ட்ஸ் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். இடதுசாரி இயக்கங்களுக்கு எதிராக கடைப்பிடித்த அதே தந்திரங்களை முஸ்லிம் எதிர்ப்பு போராட்டக் குழுக்களுக்கு எதிராகவும் சி.ஐ.ஏ பிரயோகிப்பதாக கருதப்படுகிறது. Thoo

Related Post