அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதிக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வர்த்தக நடவடிக்கை ஒன்றுக்காக தமது கட்சிக்காரரான சேனாதிபதி நைஜீரியா செல்ல வேண்டியுள்ளதால் அவருக்கு அனுமதி அளிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கேட்டுக் கொண்ட போதிலும் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
காலி துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் காரணமாகவே இவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

