Breaking
Mon. Dec 8th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (05) வழங்கி வைத்தார்.

2006 ஆம் ஆண்டு கொழும்பு மாநகரசபை தேர்தலில் துஆ கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாயிஸ் பின்னர் 2009 ஆண்டு மேல்மாகாணசபை தேர்தலில் மீண்டும் துஆ கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு மேல் மாகாணசபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Related Post