ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

ஊடகப் பிரிவு

வவுனியா மாவட்டத்தின் ஆண்டியா புளியங்குளம்  முஸ்லிம் வித்தியாலயத்தின்  வருடாந்த பரிசளிப்பும்,கவிதை நூல் வெளியிட்டு விழாவும் இன்று மாலை பாடசாலை மைதானத்தில்  இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஜாபிர்  தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில்,பிரதம அதிதியாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் வவுனியா வலயக் கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் ; கலந்து கொண்டனர்.