Breaking
Fri. Dec 5th, 2025

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இந்த வெயிலுக்கு நேற்று மட்டும் இவ்விரு மாநிலங்களில் 165 பலியானதாக தெரியவந்துள்ளது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 72 பேர் பலியாகினர். ஆந்திராவில் இந்த எண்ணிக்கை 93 அதிகரித்துள்ளது.

நேற்று மாலை சுமார் 6 மணியளவில் கிடைத்த தகவலின்படி, இரு மாநிலங்களிலும் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ தொட்டுவிட்டதாக தெரியவந்துள்ளது.

விண்வெளியின் ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து பருவக்காலங்களும் உக்கிரமாகவே உள்ளது.

Related Post