Breaking
Sat. Dec 6th, 2025

Mohamed Ali

துபாய் மாப்பிள்ளை ,படித்தவர் பெண் கேடகிறாகள் -தாய்

நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் திருமணத்தை நடத்தி விடு பணம் அனுப்புகின்றேன் – தந்தை
இன்னும் பத்து நாட்களில் திருமணம் வைத்தாக வேண்டுமாம் .மாப்பிள்ளைக்கு இரண்டு மாதம்தான் விடுமுறையாம் – தாய்
நல்லது திருமணத்தை நன்றாக ,சிறப்பாக செய் .ஆனால் நான் திருமணதிற்கு வர விடுமுறை கிடைக்காது .-ஸவூதியில் வேலை செய்யும் தந்தை
திருமணம் சிறப்பாக முடிந்தது
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாட்கள் கூட இல்லாமல் மனைவியை கர்ப்பமாக்கி விட்டு மாப்பிள்ளை பயணம் சென்று விட்டார்
இரண்டு வருடம் கழித்துதான் குழந்தையை பார்த்தார்
பாட்டன் ஒரு வருடம் கழித்துதான் குழந்தையை பார்த்தார்
ஆனால் இன்னும் மாப்பிள்ளையும் மாமனாரும் இன்னும் சந்திக்க முடியவில்லை வருடங்கள் பல ஓடினாலும்
அவர் வர இவர் இங்கு இருப்பதில்லை
இவர் வர அவர் இங்கு இருப்பதில்லை
பேரன் பேத்திகள் வீட்டில் நிறைவுதான்
இதுதான் அரபு நாட்டு வாழ்க்கை

Related Post