Breaking
Mon. Dec 15th, 2025

இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிடம் மொத்தம் 120 அணு ஆயுதங்களும், இது இந்தியா வைத்துள்ள அணு ஆயுதங்களை விட 10 எண்ணிக்கை அதிகமாகும்.

இந்த தகவல் இன்போகிராபி விளக்கப்படத்தை சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். இந்த விளக்கப்படம் 9 நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து விளக்குகிறது. 1980 ஆம் ஆண்டுகளில் 65 ஆயிரமாக உச்சத்தை அடைந்து இருந்த அணு ஆயுதங்கள் பிறகு 10 ஆயிரமாக குறைந்தது. பல நாடுகளில் இந்த ஆயுதங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.

இந்த விளக்கப்படத்தில் அமெரிக்க-ரஷ்யா ஆகியவை தலா 5 ஆயிரம் அணு ஆயுதங்கள் வைத்து இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் 300, சீனா 250, இங்கிலாந்து 225, இஸ்ரேல் 80 அணு ஆயுதங்களை வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வட கொரியா மட்டுமே கடந்த 2006, 2009 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் அணு சோதனைகள் நடத்தி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் உண்மையில் உலகில் இவ்வளவு அணு ஆயுதங்கள் இருக்கும் என்பதை மக்கள் நம்பமாட்டார்கள் என நான் நினைக்கிறேன் என இத்திட்டத்தின் நிர்வாக இயக்குனர் ரேச்சல் பிரான்சன் கூறி உள்ளார்.

Related Post