Breaking
Fri. Dec 5th, 2025

இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பால் தாக்குதல் நடத்தியநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கொன்று நடைபெற்றுள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், என். ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நேற்று இரவு, 9:00 மணியளவில், கூட்டம் முடிந்து, எம்.கே.நாராயணன், மேடையில் இருந்து இறங்கி, அரங்கில் நடந்து வந்தபோது, வாலிபர் ஒருவர், அவர் மீது செருப்பு வீச்சு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். செருப்பில் ஆணி பதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை கைதுசெய்துள்ள பொலிஸார் விசாரணை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post