Breaking
Sat. Dec 6th, 2025
இந்தோனேசிய அதிபராக ஜோகோ விடோடோ நேற்று பதவியேற்றுக்கொண்டார். இவர் அந்நாட்டின் ஏழாவது அதிபர் ஆவார்.
ஜகர்தா நகரத்தின் ஆளுநரான ஜோகோ விடோடோ உள்ளூரில் ஜோகோவி என்றழைக்கப்படுகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் ராணுவத் தளபதி பிரபோவோ சுபியந்தோவைத் தோற்கடித்து அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் அதிபராகப் பணியாற்றிய சுசிலோ பம்பாங் யுதோயோனோவுக்குப் பிறகு ஜொகோவி அதிபராகிறார். இவரின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட், சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Post