Breaking
Sun. Dec 7th, 2025
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 2:30 ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை புறப்பட்டது.
ஓடு பாதையில் இருந்து விமானம் மேலே எழும்பியபோது பறவை ஒன்று விமானம் மீது மோதியது. விமானத்தின் முன்பக்க காற்றாடியில் பறவை சிக்கியதால் காற்றாடி பழுதடைந்தது.
இதை கவனித்த விமானிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். விமானத்தில் இருந்த 139 பயணிகளும் திருச்சி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பழுதடைந்த காற்றாடி மாற்றப்பட்டவுடன் விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post