Breaking
Sun. Dec 14th, 2025

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முஸ்லிம்கள் செறிவாக உள்ள ஊர்களில், முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் புகைத்தல் உற்பத்திப்பொருட்களையும் அதன் விற்பனையையும் நிறுத்த சட்டமூலம் நிறைவேற்றுமாறு மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர் படையணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

காத்தான்குடி நகரசபை மேற்கொண்ட நடவடிக்கை போல ஏன் மற்றைய ஊர்களிலும் மேற்கொள்ள முடியவில்லை என்று கேள்வியெழுப்பியிருக்கும் இப்படையணி உள்ளுராட்சி சபைகளுக்கு தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் அதனை விற்கக்கூடாது என்ற சட்டத்தினை நிறைவேற்ற முடியும் ஆனால் பெரும்பாலான சபைகளின் தலைவர்களே இப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள தருணத்தில் அவர்கள் எவ்வாறு தடுப்பர் என்று படையணி விமர்சித்துள்ளது.
சிகரெட், பீடி, சுருட்டு, சுற்று, கஞ்சா சுருட்டு, புகையிலைச் சுருட்டு, போதைதரும் சீசா, போதை தரும் இன்னோரன்ன புகைத்தல் வகைகள் முஸ்லிம் பிரதேசங்களில் பயன்பாட்டில் இருப்பதால் பாடசாலை மாணவர்கள் கூட கடைகளில் பொய்யான வயதினை கூறி வாங்கி புகைக்கின்றனர்.
இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள புகைத்தல் பாவனையை ஏன் முஸ்லிம் பிரதேசங்களில் தடுக்க முடியாடல் போகிறது? ஒவ்வொரு ஊர்களில் மௌனியாக இருக்கும் உலமா சபையினர் இதற்கான உரிய நடவடிக்கையினை துரிதமாக நிறைவேற்றாவிடின் அடுத்துவரும் தேர்தல்களில் நேரடி பிரச்சாரத்தில் படையணி களமிறங்கும் அது மாத்திரமின்றி சுவரொட்டி பிரச்சாரத்தினையும் மேற்கொள்ள தயராக இருப்பதாக படையணி அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக பொது மக்கள் படையணிக்கு வழங்கிவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்ளும் படையணி எமது அணி தொடர்பான அனைத்துவிடயங்களையும் மக்களுக்கு அறிவிக்க இருப்பதாகவும், எதிர்கால பிரச்சார நடவடிக்கைகள் பற்றிய விளக்க மாநாடு ஒன்றையும் நடாத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளது்..
மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர் படையணி

Related Post