Breaking
Sun. Dec 7th, 2025

இலங்கை அரசை குற்றச்சாட்டு களிருந்து காப்பாற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஆதாரங்களை மறைத் தது என இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

யுத்தக் குற்ற ஆவணங்கள் குறித்து ஐ.நாவில் இடம்பெற்ற கலந்துரையாட லின்போதே இந்தக் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த கலந்து ரையாடலின்போது கருத்துத் தெரி வித்த இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர், மத்யூ லீ இலங்கையில் 2009 இல் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து உடனுக்குடன் கிடைத்த உயிரிழப் புகள் குறித்த புள்ளிவிவரங்களை ஐ.நா. மறைத்தது எனத் தெரிவித் துள்ளார்.

ஐ.நாவின் மனிதாபிமான விவகா ரங்களுக்கான அலுவலகத்தின் இரக சிய ஆவணமொன்று தனக்கு கிடைத் ததாக தெரிவித்த லீ, “”நாங்கள் உடல் களை எண்ணவில்லை” என முதலில் தெரிவித்திருந்த ஐ.நா தற்போது ஜன வரி 20 முதல் மார்ச் 7 ஆம் திகதி வரை யான காலப்பகுதியில் முல்லைத்தீவில் 2,683 பேர் கொல்லப்பட்டதாகவும், 7,241 பேர் காயமடைந்துள்ளதாகவும் விருப்பமின்றி உண்மையை ஏற்றுக் கொண்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
2009 பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மைக்கல் மொன்டசின் பேச்சாளரை நாங்கள் உயிரிழப்பு குறித்து கேட்ட வேளை, தாங்கள் உடல்களை கணக் கெடுக்கும் பணியை மேற்கொள்ள வில்லை என அவர் குறிப்பிட்டார்.

ஜோன் ஹோம்ஸ் உட்பட முக்கிய ஐ.நா. அதிகாரிகள் தங்களிடம் கொல் லப்பட்டவர்கள் குறித்து புள்ளிவிவரங் கள் இல்லை என்றே தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர்.
ஆனால், தற்போது உலகின் ஏனைய நாடுகளைப்போல இல்லாமல் இலங்கை அரசை குற்றச்சாட்டுகளி ருந்து காப்பாற்றுவதற்காக ஐக்கியநாடு கள் சபை, ஆதாரங்களை புள்ளி விப ரத்தை மறைத்துள்ளதுபோலத் தோன்றுகின்றது.

ஐ.நாவின் இந்த நடவடிக்கைகள் இன்னொரு விசாரணை இடம்பெற வேண்டும் என மத்தியூ லீ தெரிவித் துள்ளார். (os)

Related Post