Breaking
Mon. Dec 8th, 2025

2014 மார்ச் 27ம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இதுவரையில் இலங்கை உரிய பதிலை வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பிலேயே இந்த கூட்டு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் அதற்கு இலங்கை இன்னும் உரிய பதிலை அளிக்கவில்லை என்று பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் 27வது மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் இன்றைய நிகழ்வின்போது குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளுடன் உறவுகளை கொண்டுள்ள மனித உரிமை காப்பாளர்கள் தொடர்பில் சில வன்முறைகள் இடம்பெற்றதை இதன்போது பான்  கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Post