Breaking
Sat. Dec 6th, 2025

மறைந்த கல்விமான் எம்.எம்.எம். மஹ்ரூப் அவர்களினால் எழுதப்பட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர்,  பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களினால் தொகுக்கப்பட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட  “Exploring Srilankan Muslims ” இலங்கை முஸ்லிம்களின் ஆய்வு என்ற நூலின் பிரதி, நேற்று (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில், பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில், பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர் றிஸ்டி சரீப் அவர்களும் கலந்துகொண்டார்.

(ன)

Related Post