கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட பிரதிப் பணிப்பாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான லங்கா ரஞ்சினி இதனை தெரிவித்துள்ளார்.
தெரியாத இலக்கங்களிலிருந்து வரும் தவறுதலான அழைப்புகளுக்கு இளைஞர் யுவதிகள் திருப்பி அழைத்து பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளமை குறித்து அநேக முறைப்பாடுகள் நாளாந்தம் கிடைக்க பெறுகின்றன.
அதிகளவிலான யுவதிகள் இவ்வாறான தவறுதலான அழைப்புகளுக்கு மீண்டும் அழைத்து தெரியாதவர்களுடன் பேசி நண்பர்களாகின்றனர். அதன் பின்னர் நட்பு காதலாக உருவெடுத்து நேரில் சந்தித்து பேசிக்கொள்ளும் அளவுக்கு சென்று விடுகின்றது.
இது அத்தோடு நிறுத்தப்படாமல் விடுதிகளை தெரிவு செய்து பாலியல் ரீதியில் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டு பெண்கள், ஆண்களினால் கைவிட்டு செல்லப்பட்டு செல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தற்போதைய யுவதிகள் தங்களுக்கு தெரியாத இலக்கங்களுக்கு பதிலளித்து பிரச்சினைகளுக்கு ஆளாகிவிடாதீர்கள் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

