Breaking
Sun. Dec 7th, 2025

இலத்திரனியல் முறையிலான அடையாள அட்டை 2016ம் ஆண்டளவில் நடைமுறைக்கு வருவதாக ஆட்பதிவு  திணைக்களத்தின் பணிப்பாளர் சரத்குமார் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வருடத்தில் அடையாள அட்டை எடுத்தவர்களுள் அதிகமானவர்கள் க.பொ.த சாதாரண  தர பரீட்சையில் தோற்ற இருப்பவர்கள் தான். இந்த வருடத்தில் இலங்கையில் 1 மில்லியன் அடையாள அட்டைகள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் க.பொ.த சாதாரண பரீட்சைக்காக 3700 ஆயிரம் பேர் அடையாள அட்டைக்கு இந்த வருடம் விண்ணப்பித்துள்ளனர். இதேவேளை இலங்கை வாழ் மக்களுக்கு அடையாள அட்டை என்பது மிக பொக்கிசமான  ஒன்றாகும்   என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேலும் 2016ல் நடைமுறைக்கு வரவிருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டைக்காக தரவு, படம், கைவிரல் அடையாளம் என்பன இந்த அட்டையில் முக்கியமாக உள்ளடக்கப்பட வேண்டிய விடயம். எனவே அடையாள அட்டையை ஒவ்வொரு இலங்கை வாழ்மக்களும் வைத்திருப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Post