Breaking
Mon. Dec 15th, 2025

க.கிஷாந்தன்

கினிகத்தேனை கொத்தலென்ன பகுதியிலிருந்து அட்டன் வரை சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த 22 வயதுடைய தயார் ஒருவா் பஸ்ஸிலிருந்து வெளியே வீசப்பட்டு படுங்காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த பஸ்ஸிலிருந்து இறங்குவதற்கு பெல்லை அடிக்க முயற்சி செய்த போது வெளியே வீசப்பட்டுள்ளார்.

இன்று 3 மணியளவில் இந்த விபத்து அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை ரொசல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
ரொசல்ல டெம்பள்ஸ்டோவ் பகுதியில் வசிக்கும் சிவாஜிகணேசன் விசித்திரகால என்ற இந்த தாய் வட்டவளை வைத்தியசாலையில் தனது குழந்தையை பிரசவித்து 16 தினங்களாகிய சிகிச்சையின் பின் 22.03.2015 அன்று தனது தாயாரோடு வீட்டிற்கு செல்வதற்கு மேற்படி பஸ்ஸில் ஏறிருப்பதாகவும் குழந்தையை தனது தாய் கையில் கொடுத்துவிட்டு பஸ்ஸின் முன்னால் ஆசனத்தில் அமர்ந்து சென்றதாகவும் ரொசல்ல பகுதியில் இறங்குவதற்கு பெல்லை அடிக்க முற்பட்ட போது வெளியே வீசப்பட்டதாக விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

மேற்படி பஸ் வேகமாக சென்றதாலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் வட்டவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

சந்தேக நபரான சாரதிக்கு எதிராக அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Post