Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இளைஞர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் மதுரங்குளி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது 5,00,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் நவவி எம்.பியின் விசேட நிதியிலிருந்து இளைஞர்களின் விளையாட்டுத்திறமையினை ஊக்குவிக்கும் முகமாக வழங்கி வைக்கப்பட்டமையுடன், போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசில்களும், பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Post