Breaking
Sat. Dec 6th, 2025

சம்மாந்துறையில் சுற்றுலா மையமொன்று உருவாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை உள்ளடக்கிய முயற்சியின் முதற்கட்ட முன்னெடுப்பு நேற்று இடம்பெற்றது.

இத் திட்டமானது அண்மையில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயிலினால் முன்மொழியப்பட்ட திட்ட அறிக்கைக்கு அமைவாக, சம்மாந்துறையிலுள்ள 40 வீட்டுத்திட்டத்தில் குறித்த சுற்றுலா மையத்தினை பாரிய அளவில் உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை அவசரமாக முன்னெடுக்க வேண்டுமென்ற இலக்கில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.இஸ்மாயீல் இது தொடர்பான அதிகாரிகளுடன் குறித்த பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்து, அதிகாரிகளுடன் கலந்துரையாடியமையும் குறிப்பிட்டத்தக்கது.

Related Post