Breaking
Fri. Dec 5th, 2025
Europaflagge

கடந்த புதன் அன்று பலஸ்தீன் மற்றும் ஐரோப்பா நாடுகளின் நல்லுறவுக்கான கூட்டமைப்பு ஐரோப்பாவில் கூடியது. ஐரோப்பாவின் பாரளமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்து கூட்டத்தில் ஐரோப்பாவின் பல்வேறு அரசியல் கட்சிகளை சர்ந்த பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பலஸ்தீனின் தற்போதைய நிலைகள் குறித்து கூட்மைப்பு ஆய்வு செய்தது. இறுதியில் பலஸ்தினீல் இஸ்ரேல் அரங்கேற்றி வரும் கொடுமைகளை கடுமையாக கண்டிப்பதாகவும், இஸ்ரேலின் அத்துமீறல்கள் சகித்து கொள்ள முடியாதது என்றும் இஸ்ரேலின் அக்கிரமங்களை ஐரோப்பிய கூட்டமைப்பு ஒருமித்து கண்டிப்பதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்க பட்டது.

சர்வதேச சட்டங்கள் எதையும் மதிக்காமல் பலஸ்தீனர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடும் இஸ்ரேலின் அடக்கு முறைகளை சர்வதேச சமுதாயம் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சர்வதேச சமுதாயம் ஒருங்கிணைய வேண்டும் என்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கேட்டு கொண்டிருப்பதோடு இஸ்ரேலுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.

By

Related Post