உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்க தெளிவான அறிக்கை வேண்டும்: ஜனாதிபதி செயலகம்

சிகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சின்னத்தம்பி உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான தெளிவான  அறிக்கையொன்றை  சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தால் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடந்த 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.