தான் உயிருடன் இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்தார். தான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகுவதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை சிறந்த ஐதேக செயற்பாட்டாளர் என்பதால் கட்சியை விட்டு செல்லும் அவசியம் தனக்கு இல்லை என அவர் கூறினார். கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
-Ada derana-

