உரமூடையின் அதிகபட்ச விலை ரூ.2,500

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு –

ஒரு மூடை உரத்தின் சில்லரை விலையை அதிகபட்சம், 2,500 ரூபாயாக நிர்ணயிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.