உருவ பொம்மை எரிப்பிற்கும் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை! கே.எம். நிலாம்

-ஊடகப்பிரிவு-

முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் (புதுப்பள்ளிவாசல்) முன்பாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கும், உருவ பொம்மை எரிப்பிற்கும்  கட்சி ரீதியான எவ்வித தொடர்பும் இல்லை என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட கிளைத் தலைவரும், யாழ் மாநகர சபை உறுப்பினருமான  கே.எம் நிலாம் தெரிவித்தார்.

எமது யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களே ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு  செய்திருந்தனர் என்பது யாவரும் அறிந்த உண்மை. தற்போதைய மாகாண சபை போனஸ் உறுப்பினர் அயூப் அஸ்மீன் மற்றும் அவரது ஊடகச் செயலாளர்  அப்துல்லாஹ் என்பவரும்  இந்த விடயத்தை அரசியலாக்கி, மக்களை தவறான வழியில் திசை திருப்புகின்றனர்.

நாளுக்கு நாள் புதுப்புது அமைப்புக்களை நிறுவி எமது கட்சிக்கும், கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயருக்கும் அபகீர்த்தியை பரப்புகின்றனர் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.