Breaking
Fri. Dec 5th, 2025

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலத்தை மீட்டு எடுக்க முஸ்லிம் உலகம் ஒன்று பட்டு எழ வேண்டும் பலஸ்தீன் வெளியுறவு அமைச்சகம் வேண்டு கோள்!

இன்று பைத்துல் முகத்தஸில் தொழுகைக்காக சென்ற பலஸ்தீன முஸ்லிம்களுக்கும் இஸ்ரேல் பொலிஸ்  துறைக்கும் இடையே மாபெரும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில்  ஸ்ரேலின் பொலிசார்  இறை இல்லத்திற்கு உள்ளேயே கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்து புனித தலத்தின் புனிதத்தை சீர் குலைக்க முனைந்துள்ளது.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் பொலிசார்களை எதிர் கொண்ட பாலஸ்தீன முஸ்லிம்கள் பலர் காயமடைந்தனர்இந்த நிகழ்வுகளை தொடர்ந்து இன்று பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்முஸ்லிம்கள் பொறுத்தது போதும் பொங்கி எழ வேண்டிய காலம் நெருங்கி கொண்டிருக்கிறது என்றும்முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலத்தை இஸ்றவேலர்களிடம் இருந்து மீட்டு எடுப்பதர்காக இஸ்லாமிய உலகம் ஒன்று பட்டு எழவேண்டும் எனவும் அதற்கான வழிவகைகளை இஸ்லாமிய உலகம் இனியும் தாமதிக்காமல் ஆரய வேண்டும் எனவும் கேட்டு கொண்டிருக்கிறது.இறைவா முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலத்தை மீட்டு எடுப்பதற்கு உரிய பலத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவாயாக!

Related Post