Breaking
Fri. Dec 5th, 2025
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை இன்று (30)  மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன், அடம்பன் மகாவித்தியாலயத்தில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜ்ர அபேவர்தன மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன்  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம் வை தேஷபிரிய, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  எஸ் டிமெல், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Post