Breaking
Sun. Dec 7th, 2025

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கின்றது. ஆனாலும், 2009ஆம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடும் போது 6 ஆசனங்களை இழந்துள்ளதுடன், மக்களின் அபிமானத்தையும் பெருமளவில் இழந்துள்ளமை தேர்தல் முடிவுகளில் தெரிகின்றது.

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊவா மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று நள்ளிரவு முதல் வெளியாகி வந்தது. இறுதி முடிவு சற்று முன்னர் வெளியானது. அதன் பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமுள்ள 34 ஆசனங்களில் 19 (வெற்றி பெற்றது 17, போனஸ் 2) ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) கொடுத்து 13 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 2 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஊவாக மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 போனஸ் ஆசனங்களோடு சேர்த்து 25 ஆசனங்களைப் பெற்று பெருவெற்றி பெற்றிருந்தது. ஆனாலும், இம்முறை 6 ஆசனங்களை இழந்துள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் இறுதி முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 19 ஆசனங்கள் ( 17+ 2)
ஐக்கிய தேசிய கட்சி – 13 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி – 2 ஆசனங்கள்

2009 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் இறுதி முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 25 ஆசனங்கள் (23+ 2)
ஐக்கிய தேசிய கட்சி – 7 ஆசனங்கள்
மலையக மக்கள் முன்னணி- 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி – 1 ஆசனம்

Related Post